திருப்பூர்:தமிழகத்தில், புதியதாக ஒன்பது இணை கமிஷனர் அலுவலகம் உருவாக்க, ஒன்பது கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அறநிலையத்துறைக்கு இதுவரை, 11 இணை கமிஷனர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால், மேலும் ஒன்பது இணை கமிஷனர் அலுவலகம் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தலா இரண்டு வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கி, இணை கமிஷனர் அலுவலகங்கள் இயங்க உள்ளன.
புதிதாக, சென்னை -2, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், துாத்துக்குடி, கடலுார் மாவட்டங்களில், இணை கமிஷனர் அலுவலகம் திறக்க, ஒன்பது கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகங்கள் எண்ணிக்கை, 20 ஆக உயர்ந்துள்ளது.
புதிய அலுவலகங்களில், மொத்தம், 171 பணியிடங்களை தோற்றுவிக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு கோவையிலும், கரூர், திருப்பூர் மாவட்டங்களுக்கு திருப்பூரிலும், இணை கமிஷனர் அலுவலகங்கள் இயங்கும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE