சென்னை: 'நிவர்' புயல் கரையை கடக்கும்போது, சென்னையில், 100 கி.மீ., வேகத்துக்கு, சூறாவளி காற்று வீசும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும்போது, நாகை, காரைக்கால், கடலுார், திருவாரூர் மாவட்டங்களில், மணிக்கு, 130 கி.மீ., வேகத்திலும், அதிகபட்சம், 145 கி.மீ., வேகத்திலும் சூறாவளி வீசும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், மணிக்கு, 90 முதல், 100 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசும்.

அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், இன்றும் மிக கன மழை தொடரும். சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் வானம் மேக மூட்டங்களால் சூழப்பட்டு, விட்டு விட்டு மழை கொட்டியது. நேற்று காலை, 8:30 மணி முதல் மாலை, 4:00 மணி வரையில், சென்னை, நுங்கம்பாக்கத்தில், 10 மற்றும் விமான நிலையத்தில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE