பெரியகுளம் : பெரியகுளம் அருகே சமூக விரோத செயல்கள் நடந்த பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டடம் தினமலர் செய்தி எதிரொலியாக இடிக்கப்பட்டது.
கைலாசபட்டி அருகே பெரியகுளம் ஒன்றிய அலுவலகத்திற்கு சொந்தமான கட்டடத்தில் முன்னர் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கியது. சில ஆண்டுகளுக்கு முன் தேனிக்கு வட்டார அந்த அலுவலகம் மாற்றப்பட்டது. ஆனால் பழைய கட்டடத்தில் கஞ்சா, மதுபாட்டில் விற்பது உட்பட பல்வேறு சமூகவிரோத செயல்கள் நடந்து வந்தது. கதவு, ஜன்னல்கள் திருடப்பட்டது. சமூக விரோதிகள் தென்கரை போலீசாருக்கு போக்குகாட்டினர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக 20 முதல் 25 சென்ட் அரசு பழைய கட்டடம் நேற்று இடிக்கப்பட்டது. 10 க்கும் அதிகமான சாக்கு மூட்டைகளில் காலி மதுபாட்டில் மற்றும் உடைந்த மதுபாட்டில் சேகரிக்கப்பட்டது. சிதறிக்கிடந்த ஏராளமான கஞ்சா, புகையிலை பொட்டலங்கள் அகற்றப்பட்டன. பெரியகுளம் மாவட்ட பத்திரப்பதிவுத்துறை அலுவலகம், மின்துறை அலுவலகம் உள்ளிட்டவை வாடகை கட்டடங்களில் இயங்கி வருகிறது. இந்த இடத்தில் புதிதாக கட்டுமானப்பணி மேற்கொள்ளப்படும் போது அரசு அலுவலகங்கள் இங்கு வாடகைக்கு வந்தால் ஒன்றிய அலுவலகத்திற்கு வருவாய் அதிகரிக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE