திண்டுக்கல் : முகூர்த்தம் மற்றும் கார்த்திகை மாதம் என்பதால் திண்டுக்கல்லில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் பூ மார்கெட்டிற்கு மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, ரோஜா என நாள்தோறும் 20 டன் அளவில் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இங்கிருந்து மதுரை, கோவை போன்ற மாவட்டங்களுக்கும், கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. தீபாவளி முடிந்த பின்பு பூக்களின் வரத்தும், விலையும் குறைந்திருந்தது. இந்நிலையில் தொடர்மழையால் பூக்களின் வரத்து குறைவும், முகூர்த்த தினங்கள் தொடர்ந்து வருவதாலும், கார்த்திகை மாதம் என்பதாலும் பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது.
எனவே விலை உயர்ந்துள்ளது.ரூ.300 க்கு விற்ற மல்லிகை ரூ.1200 க்கும், ரூ.200 க்கு விற்ற கனகாம்பரம் ரூ.1000 க்கும், ரூ.200 க்கு விற்ற முல்லை ரூ.800 க்கும் விற்பனையானது. சம்மங்கி ரூ.150, ரோஸ் ரூ.200, பன்னீர் ரூ.120, செவ்வந்தி ரூ.150, ஜாதிப்பூ ரூ.800, பிச்சி ரூ.100 என அனைத்து பூக்களின் விலையும் அதிக விலைக்கு விற்பனையானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE