தேவாரம் : தேவாரம் பேரூராட்சி அலுவலக மெயின் ரோட்டில் இருந்து சந்தைதெருவிற்கு பெரிய ஓடை வழியாக கடந்து செல்வதற்கு பாலம் இல்லை.
இதனால் கழிவுநீரில் நடந்துசெல்லும் அவலம் உள்ளது. காய்கறி வாங்க உழவர் சந்தை வாரம் ஒருநாள் மட்டும் செயல்படுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்துகின்றனர்.இப்பேரூராட்சி 16, 17 வது வார்டுக்கு உட்பட்ட சந்தை தெரு, நடுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ளவர்கள் பேரூராட்சி அலுவலகம், வாரச்சந்தை, ரேஷன் கடை உள்ளிட்ட பகுதிகளுக்கு பெரம்புகட்டி பெரிய ஓடையை கடந்து செல்ல வேண்டும்.
ஓடையிலிருந்து சந்தை தெருவிற்கு செல்ல இருந்த தரைப்பாலம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உடைந்தது. ஓடைப்பகுதியில் கழிவுநீரை கடந்து வரும் நிலையில் மக்கள் சிரமம் அடைகின்றனர். பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள உழவர் சந்தை வாரத்தில் ஒரு நாள் மட்டுமே செயல்படுகிறது. திறந்தவெளியில் இருப்பதால் இரவில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூகவிரோத செயல்கள் நடக்கிறது.
மக்கள் கூறுவது என்ன:கூடுதல் விலைஎஸ்.ராமலட்சுமி: சந்தை தெருவிலிருந்து பேரூராட்சி அலுவலகத்திற்கு ஓடைப்பாலம் இல்லாததால் வாகனங்களில் விளைபொருட்களை கொண்டு வர முடியாத நிலை உள்ளது. பேரூராட்சி அலுவலகம், காய்கறி சந்தைக்கு ஓடைப்பகுதியில் வரும் கழிவுநீரை கடந்து செல்ல வேண்டியதுள்ளது. துவக்கத்தில் தினமும் செயல்பட்ட உழவர் சந்தை பல ஆண்டாக ஞாயிறு மட்டும் வாரச்சந்தையாக செயல்படுகிறது. இதனால் வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலை கொடுத்து வாங்குகிறோம். தினமும் செயல்பட வேண்டும்.
சுகாதாரக்கேடு கே.முத்துமணி: சந்தைதெருவிலிருந்து பெரிய ஓடை வழியாக மெயின் ரோட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு மாணவர்களை டூவிலரில் அழைத்து முடியவில்லை. பிரம்புகட்டி மலையடிவாரத்தில் துவங்கும் பெரிய ஓடையில் வரும் மழைநீரானது பெரியதேவி அம்மன்குளம் கண்மாய் வரை வந்தடைகிறது. பல ஆண்டாக பெரிய ஓடை துார்வாரப்படாததால் செடிகளின் ஆக்கிரமிப்பில் சிக்கி மழைநீர் சீராக செல்ல முடியாமல் தேங்குகிறது. கொசுத்தொல்லை , சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE