மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கொரோனா பரவலானது ஜூன் மாதம் வரை தினமும் 10 க்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டனர்.
ஜூலை மாதம் முதல் கொரோனா கோர தாண்டவம் ஆடியது. தொற்றுப் பாதிப்பாது இரட்டிப்பானது. இதுவரை 193 உயிரிழப்பு அதுவரை 1000 க்கும் குறைவான நபர்களே பாதிக்கப் பட்ட நிலையில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் 7000 பேர் பாதிக்கப்பட்டனர். அதற்கேற்ப உயிரிழப்பும் அதிகரித்தது. இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். 193 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த 2 மாதங்களாக கொரோனாவின் தாக்கம் குறைந்து, குணமடைவோர் விகிதம் அதிகரித்துள்ளது.
அதன்படி, நேற்றுமுன்தினம் வரை 9876 பேர் குணமடைந்து, 68 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை பாதிப்பானது 10 க்கும் குறைவாக இருந்தது. தொற்று அதிகரிக்கிறதா இந்நிலையில் தற்போது தினமும் 20 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். கடந்த 4 நாட்களாக தினமும் ஒருவர் உயிரிழக்கிறார். பருவ மழைக்காலமும் தொடங்கி யுள்ளதால் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே, அரசும் இதைதான் எச்சரித்திருந்தது. எனவே இக்காலகட்டத்தில் பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனை டீன் விஜயகுமார் கூறியதாவது: சிலநாட்களாக அதிகரித்து உள்ளதால் கொரோனா பரவல் அதிகரிப்பதாக உறுதியாகக் கூறமுடியாது.
முன்பைவிட குறைவுதான் எனக்கருதி அலட்சியம் கூடாது. மழைக்காலத்தில் பொதுமக்கள் அரசு கூறும் வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே பரவலை தடுக்க முடியும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE