கமிஷனர் பொறுப்பேற்புதிண்டுக்கல்:
டிராக்டர் பறிமுதல்வடமதுரை:
படிப்பகத்திற்கு கலெக்டரிடம் மனுவத்தலக்குண்டு:
விபத்தில் ஒருவர் பலிதாண்டிக்குடி: குப்பம்மாள் பட்டி ரோட்டில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வத்தலக்குண்டு குரும்பபட்டி ரஞ்சித்குமார் 32, காயமடைந்து மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.தகவல் கொடுத்தவர் மீது தாக்கு வேடசந்துார்: கோட்டூரில் சில்லரை மது விற்பனை நடப்பது குறித்து கோட்டூரை சேர்ந்த முத்துராமலிங்கம் 36, என்பவர் வேடசந்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் மது விற்பனையில் ஈடுபட்ட சொட்டமாயனுார் பாண்டி 30, மற்றும் ஒருவர் சேர்ந்து முத்துராமலிங்கத்தை தாக்கியுள்ளனர். தலையில் காயமடைந்த முத்துராமலிங்கம், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விவசாயி உடல் மீட்புஅம்பிளிக்கை: பெரியகோட்டை அருகே ஒண்டிபொம்மி நாயக்கனுாரைச் சேர்ந்த விவசாயி பொம்முராஜ் 35, நேற்று முன்தினம் முதல் காணவில்லை. குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் நேற்று அவருக்கு சொந்தமான கிணற்றுக்குள் காலணிகள் மிதந்தன. ஒட்டன்சத்திரம் நிலைய அலுவலர் அண்ணாதுரை தலைமையில் தேடிப்பார்த்த தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டனர். அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.விஷம் குடித்த தாய் இறப்புஅம்பிளிக்கை: ஸ்ரீரங்ககவுண்டன்புதுாரைச் சேர்ந்த பெரியசாமி மனைவி துளசிமணி 24, குழந்தைகள் நந்திகா 5, சசிக்குமார் 3, ஆகியோருடன் 4 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்தார். மூவரும் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். துளசிமணி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். குழந்தைகள் இருவரும் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE