சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் அணிவதில் அலட்சியம் எச்சரிக்கிறது சுகாதாரத்துறை

Added : நவ 25, 2020
Share
Advertisement
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி பேரூராட்சிகள் உட்பட பெரியகுளம் தாலுகா முழுவதும் 80 சதவீதம்பேர் முகக்கசவம் அணிவதில்லை. கொரோனா பரவலை தடுக்க இதில் மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். பெரியகுளம் தாலுகா பகுதிகளில் மக்கள் கொரோனா தடுப்புக்கான முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர். பொது இடங்களில் சமூக இடைவெளியை

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி பேரூராட்சிகள் உட்பட பெரியகுளம் தாலுகா முழுவதும் 80 சதவீதம்பேர் முகக்கசவம் அணிவதில்லை. கொரோனா பரவலை தடுக்க இதில் மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

பெரியகுளம் தாலுகா பகுதிகளில் மக்கள் கொரோனா தடுப்புக்கான முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது இல்லை. பெரியகுளம் பஜார்வீதி, தேவதானப்பட்டி அரிசிக்கடை, கெங்குவார்பட்டி பகுதிகளில் இதனை காணலாம். இந்தப்பகுதிகளில் 50க்கும் அதிகமானோர்கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டிருந்து குறிப்பிடத்தக்கது. எச்சரிக்கைசுபநிகழ்ச்சிகளில் அதிகம் பேர் பங்கேற்கின்றனர்.

இடைவெளி இல்லாமல் நெருக்கமாக உட்காருகின்றனர். ஆட்டோ,வாகனங்களில் மொத்தமாக பயணிப்பது பரவலுக்கு வழி வகுக்கிறது.எனவே அலட்சியம் இன்றி கட்டாயமாக முக்கவசம் அணியவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி கூடுதல் எச்சரிக்கையுடன் மக்கள் செயல்பட்டால் தான் கொரோனா பரவலை முழுமையாக தடுக்க முடியும் என சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X