காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை தொலைநிலைக் கல்வி மே 2020ல் நடந்த இறுதி பருவத்தேர்வுகளுக்கு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பதிவாளர் குருமல்லேஷ் பிரபு மற்றும் பல்கலை., தேர்வாணையர் கண்ணபிரான் தெரிவித்ததாவது: அழகப்பா பல்கலை தொலைநிலைக் கல்வி மே 2020ல் நடந்த இறுதி பருவத்தேர்வுகளுக்கு இணையவழி மதிப்பீட்டு முறை பின்பற்றப்பட்டு இளநிலை பிரிவு, முதுநிலை பிரிவு, பி.ஜி.டிப்ளமோ பிரிவு மற்றும் சான்றிதழ் பாடப் பிரிவுகளுக்கு www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மறுமதிப்பீட்டிற்கு, விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள், தேர்வு முடிவு வெளியான 7 தினங்களுக்குள் விடைத்தாள் நகல் ஒன்றுக்கு ரூ.500 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல் பெற்ற பின்பு, மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், நகல் பெற்ற நாளிலிருந்து 7 தினங்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ.500 இணையவழி மூலம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். நேரடியாக மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தேர்வு முடிவுவெளியான7 நாட்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ.600 செலுத்தி விண்ணப்பிக்கலாம், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE