திருப்பரங்குன்றம் : ''திருப்பரங்குன்றம் தாலுகாவில் பயிரிடப்பட்ட காய்கறி செடிகளில் நோய் தாக்குதலை தவிர்க்க வேண்டும்,'' என, மதுரை வேளாண் கல்லுாரி வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை உதவி பேராசிரியர் பழனிகுமார் தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:இத்தாலுகாவில் பயிர்இடப்பட்ட தக்காளி, மிளகாய், வெங்காயத்தில் நோய்தாக்கம் உள்ளது.இதை கட்டுப்படுத்த தக்காளி, மிளகாய், வெங்காய பயிர்களை ஒரே நிலத்தில் தொடர்ச்சியாகபயிரிடாமல் சுழற்சி முறையில் பயிரிடலாம்.இப்பயிர்களில் வாடல்நோயை கட்டுப்படுத்த பெவிஸ்டின் அல்லதுகாப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது கார்பன்டாசிம் மருந்தினைஒரு லிட்டர் நீரில் 2 கிராம் கலந்து தெளிக்கவேண்டும்.
மிளகாய் பயிரில் இலைப்பேனை கட்டுப்படுத்த குளோரிபைரிபாஸ் அல்லது பிப்ரோனில் மருந்தினை ஒரு லிட்டர் நீரில் 1.5 மில்லி கலந்து தெளிக்கலாம்.வெங்காய பயிரில் வாடல் நோயை கட்டுப்படுத்த மேஸ்கோசெப் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது பெவிஸ்டின் மருந்தினை ஒரு லிட்டர் நீரில் 2 கிராம் கலந்து தெளிக்கலாம். கருகல் நோயை கட்டுப்படுத்த இமிடாகுளோபிரிட் ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி கலந்து கெளிக்கலாம், என கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE