பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் 100 தங்கும் மையங்கள் தயார்

Added : நவ 25, 2020
Share
Advertisement
சிவகங்கை : நிவர் புயல் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க 100 தங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிக்கான அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளனர், என கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.நிவர் புயல் காரணமாக சிவகங்கை கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்ததாவது:மாவட்டத்தில் பெரிய

சிவகங்கை : நிவர் புயல் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க 100 தங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிக்கான அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளனர், என கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.நிவர் புயல் காரணமாக சிவகங்கை கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்ததாவது:மாவட்டத்தில் பெரிய அளவு காற்று இருக்காது, மழை அதிகம் பெய்ய வாய்ப்புள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைக்க நுாறு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. தாழ்வான பகுதிகளாக 37 கிராமங்கள் அறியப்பட்டுள்ளது. அங்குள்ள மிளகாய், வாழை, நெல், பப்பாளி, தென்னை உள்ளிட்ட பயிர்களை பாதுகாக்க வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.

மகப்பேறுக்காக காத்திருப்பவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாக அரசு மருத்துவமனைகளில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மீட்பு பணியில் போலீசார் தீயணைப்புத்துறையினர், நேருயுவகேந்திரா, செஞ்சிலுவை சங்க தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். அரசு போக்குவரத்து கழக பஸ்கள்முழுமையாக இயக்கப்படவுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் விபத்தில் சிக்கினால் மீட்பு வாகனங்கள், மணல் அள்ளும் இயந்திரம் தயார் நிலையில் உள்ளது. கிராமப்புறங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தண்டோரா போடப்படவுள்ளது. அவசரத்திற்கு 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அதிகாரிகள் ஒருங்கிணைப்புடன் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, என அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X