சிவகங்கை நகராட்சி சார்பில் மன்னர் மேல்நிலைப்பள்ளி எதிரே புதன் தோறும் வாரச்சந்தை நடக்கிறது. சந்தை செயல்படும் தாலுகா அலுவலகரோட்டில் பள்ளி, வங்கிகள் உட்பட அரசு அலுவலகங்கள் செயல்படுகிறது. சந்தை நடத்த நகராட்சிஒதுக்கிய இடத்தில் மட்டுமே வியாபாரிகள் கடை வைப்பதில்லை. மாறாக சிவன் கோயிலில் இருந்து ஸ்டேட் பாங்க் வரை ரோட்டின் இரு புறத்திலும் கடைகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்து விடுகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்குறிப்பாக தலைமை தபால் அலுவலகத்தை மறைத்து கடை வைத்தும்சிரமத்தை ஏற்படுத்துகின்றனர். பள்ளி நாட்களில் சந்தையை கடந்து பள்ளிக்கு செல்வதில் மாணவர்கள் சிரமம் அடைகின்றனர்.வங்கி, தாலுகா அலுவலகம் செல்ல முடியாமல் சந்தையன்று போக்குவரத்து நெரிசலில்மக்கள் சிக்கி தவிக்கின்றனர். போக்குவரத்து போலீசாரும் சரக்கு வாகனங்கள், கார், ஆட்டோ உள்ளிட்டவற்றை சந்தை ரோட்டில் அனுமதிப்பதால் நெரிசலில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.சமூக இடைவெளிஎங்கேகொரோனா கால கட்டத்தில் தொற்று பரவுவதை தடுக்க, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து வர சுகாதாரத்துறை வலியுறுத்துகிறது.
ஆனால், வாரச்சந்தை அன்று இது போன்ற எவ்வித நடைமுறையை பின்பற்றாமல், கூட்ட நெரிசலாக காணப்படுகின்றனர். சந்தையன்று தாலுகா அலுவலக ரோட்டில் இருந்து அரண்மனை வாசல் வரை போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றன. இதை தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் வாரச்சந்தைக்கென நகருக்கு வெளியே இடம் தேர்வு செய்து அங்கு சந்தைநடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE