சிவகங்கை : பணிபுரியும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படவுள்ளது.
தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.ஆண்டு தோறும் ஒரு லட்சம் பணிபுரியும் மகளிர்களுக்கு வாகனத்தின் விலையில் 50 சதவீதம், 25 ஆயிரம் ரூபாய் இதில் எது குறைவோ அது மானியமாக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் 1919 மகளிருக்கு வழங்கப் படவுள்ளது.தகுதிகள்: இதில் பயன் பெற கல்வி தகுதி தேவையில்லை. 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது இரு சக்கர வாகன ஓட்டுநர் அல்லது பழகுநர் உரிமம் பெற்றுஇருக்க வேண்டும்.ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும்.
குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளின் மூன்று சக்கர வாகனத்திற்கு ரூ.31,250 மானியமாக வழங்கப்படும். மலைவாழ்பகுதியில் வசிக்கும் பெண்கள், கிராமப்புறத்திலிருந்து வெகு தொலைவில் வசிக்கும் பெண்கள், ஆண் ஆதரவில்லாத குடும்ப தலைவிகள், விதவைகள், 35 முதல் 45 வயது வரை திருமணம் ஆகாத பெண்கள், திருநங்கையர், ஆதிதிராவிடர் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.18 முதல் 45 வயதிற்குள் என்பதற்கான பிறந்த தேதிக்கான ஆவணம், இருப்பிட சான்று, வாகன ஓட்டுநர், பழகுநர் உரிமம், பணிபுரியும் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட சான்று, ஆதார் அட்டை, கல்வித்தகுதி, பாஸ்போர்ட் அளவிலான போட்டோ, ஜாதி சான்று, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, இரு சக்கர வாகன மாதிரி விலைப்பட்டியல் ஆகியவற்றுடன் கிராமப்புற பகுதியில் உள்ளோர் ஒன்றியங்களிலும், நகர் புறத்தில் உள்ளோர் பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம், என கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE