மதுரை : நிவர் புயல் கிராமத்தை நெருங்கினால் அதை சந்திக்க மின்தடை நீக்கி, ஆழ்குழாய் குடிநீர் மோட்டர்களை இயக்க ஜெனரேட்டருடன் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளார் மதுரை வீரபாஞ்சன் அருகேவுள்ள திண்டியூர் ஊராட்சி தலைவர் குரு சந்திரசேகர்.
அவர் கூறியதாவது: வரும் முன் காப்போம் நோக்கத்தில் மழை, புயல் பாதிப்புகளை தடுக்க மின் இணைப்பு சரி செய்தல், மரக்கிளை வெட்டுதல், ரோடுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை நேற்று முன்தினம் துவங்கி செய்து வருகிறேன். மின்தடை ஏற்பட்டால் குடிநீர் தட்டுப்பாடு வரக்கூடாது என்பதற்காக மின் மோட்டார் இணைக்கப்பட்ட ஆழ்குழாய் தொட்டிக்கு குடிநீர் கொண்டு வர ஜெனரேட்டர் தயாராக உள்ளது. ஒரு மணி நேரம் ஜெனரேட்டர் இயக்கினால் குடிநீர் கிடைக்கும். வீடுகளில் மழைநீர் புகுந்தால் அரசு பள்ளி, சொந்த கட்டடங்களில் தங்க வைத்து உணவு வழங்க திட்டமிட்டு உள்ளேன்.
ஊராட்சியில் உள்ள 700 குடும்பங்களை பாதுகாக்க ரூ.70 ஆயிரத்தில் பல பணிகளை செய்கிறேன். எங்கள் ஊரிலிருந்து திருமணமாகி செல்லும் பெண்களுக்கு இலவச கட்டில், மெத்தை, தீபாவளிக்கு புத்தாடை, இனிப்பு வழங்குகிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதால் இதுவரை நோய் தலைகாட்டவில்லை.முன்மாதிரி ஊராட்சியாக திகழ கவனம் செலுத்தி வருகிறேன், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE