மதுரை, : நிவர் புயல் மீட்பு பணிகளுக்காக மதுரையில் 25 வீரர்களை கொண்ட தேசிய பேரிடர் குழு முகாமிட்டுள்ளது.
இப்புயல் தொடர்பாக தேசிய பேரிடர் மீட்பு குழு, அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் அன்பழகன், கமாண்டர் ராஜன்பாலு ஆலோசனை நடத்தினர்.கலெக்டர் கூறியதாவது: மாவட்டத்தில் 27 இடங்கள் மழையால் பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு மீட்பு குழு என 27 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டு உள்ளது. மீட்பு பணிகளுக்காக அனைத்து துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். மழைக்கு முன், பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிவாரண முகாம்களில் தேவையான உணவு, உடை வசதிகள் செய்யப்பட்டுள்ளன, என்றார். ராஜன்பாலு கூறுகையில், ''கடலுாரில் 6, புதுச்சேரியில் 2, சென்னையில் 2, காரைக்கால் மற்றும் மதுரையில் ஒன்று வீதம் 12 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE