சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராஜிவ் கொலைக் கைதி விடுதலை கோரி வழக்கு

Added : நவ 25, 2020
Share
Advertisement
மதுரை : விடுதலை செய்யும் முடிவை அரசு செயல்படுத்த முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலைக் கைதி ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு:முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக 29 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் உள்ளேன். உடல், மன ரீதியாக

மதுரை : விடுதலை செய்யும் முடிவை அரசு செயல்படுத்த முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலைக் கைதி ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு:முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக 29 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் உள்ளேன். உடல், மன ரீதியாக பாதித்துள்ளேன். 20 ஆண்டுகள் சிறையில் இருந்தாலே முன்கூட்டியே மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளது.ஆயுள் தண்டனை விதித்து 10 ஆண்டுகள் சிறை தண்டனை பூர்த்தி செய்த 1600 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யும் அரசின் பரிந்துரையை 2018 ல் கவர்னர் ஏற்றார்.ராஜிவ் கொலை வழக்கில் நான் உட்பட 7 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய 2018 ல் தமிழக அரசு கவர்னரின் இசைவிற்கு அனுப்பியது.

அது 22 மாதங்களாக பரிசீலிக்கப்படாமல் கவர்னர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. இது பாகுபடுத்தும் வகையில் உள்ளது.என்னை விடுதலை செய்யும் முடிவை செயல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரவிச்சந்திரன் குறிப்பிட்டார்.நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி அமர்வு விசாரித்தது. தமிழக அரசுத் தரப்பு,'இது போன்ற நிவாரணம் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இவ்விவகாரத்தில் கவர்னருக்கு எதிராக எவ்வித உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க இயலாது,' என தெரிவிக்கப்பட்டது.தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.,மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X