கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி வட்டார விவசாயிகளுக்கு நிவர் புயலின் போது பயிர்களை பாதுகாப்பது குறித்து வேளாண் உதவி இயக்குனர் மதுரைசாமி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
அவர் கூறியதாவது: புயலால் கன மழை இருப்பதால் இயற்கை இடர்பாடுகளில் இருந்து பாதுகாத்து கொள்ள இ சேவை மையம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் சாகுபடி செய்ததற்கான அடங்கல், சிட்டா, ஆதார் நகல் மற்றும் உரிய காப்பீட்டு கட்டணத்தை செலுத்தி பயிர்களை காப்பீடு செய்யலாம். முதிர்ச்சி அடைந்த தேங்காய் மற்றும் இளநீர் காய்களை அறுவடை செய்து, அதிக எடையுள்ள ஓலைகளை அகற்ற வேண்டும். தென்னைக்கு உரமிடுவது மற்றும் நீர் பாய்ச்சக்கூடாது. வாழை மற்றும் பப்பாளி மரங்களுக்கு ஊன்றுகோல் அமைக்க வேண்டும். தொடர்ந்து மழை பெய்தால் விவசாயிகள்வேளாண் விளைபொருட்களை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பாதுகாப்பாக சேமிக்கலாம், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE