அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் ஒன்றியம் டி.மேட்டுப்பட்டியில் பூமிக்குள் புதைந்து வரும் நாடக மேடையால் எந்த நேரத்திலும்இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இங்குள்ள மந்தையில் இருந்த கிணற்றை மூடி அதன் மீது 2007 ல் எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் நாடகமேடை கட்டப்பட்டது. பராமரிப்பின்றி மேடை தளத்தின் ஒரு பகுதி பூமிக்குள் இறங்கியது. கட்டடம் விழும் நிலையில் உள்ளதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. நாடக மேடை, அருகே உள்ள பழமையான தண்ணீர்தொட்டியை அகற்ற ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE