பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை நீர்

Updated : நவ 25, 2020 | Added : நவ 25, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: நிவர் புயல் காரணமாக, சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால், பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியது. பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தன. அவை உடனடியாக அகற்றும் பணியில் ஊழியர்கள்
chennairains, Nivar, cycloneNivar, Chennai,rain,சென்னை,மழை,

சென்னை: நிவர் புயல் காரணமாக, சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால், பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியது. பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தன. அவை உடனடியாக அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.


latest tamil news



அதிகபட்சமாக புரசைவாக்கத்தில் 15 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. சோழிங்கநல்லூரில் 14.5 செ.மீ., கிண்டியில் 14.3 செ.மீ., நுங்கம்பாக்கம், அண்ணா பல்கலையில் தலா 14 செ.மீ., எழும்பூரில் 13.6 செ.மீ., மாம்பலத்தில் 13 செ.மீ.,, ஆலந்தூர் 11.9 செ.மீ., மாமல்லபுரத்தில் 12 செ.மீ., தாம்பரத்தில் 11.5 செ.மீ., திருப்போரூரில் 9.2 செ.மீ., மதுராந்தகம் 8 செ.மீ., செங்கல்பட்டில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.



இதனிடையே சென்னையில் இன்னும் சில மணி நேரங்களில் மீண்டும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-நவ-202015:01:35 IST Report Abuse
ஆரூர் ரங் 10 அடியில் நீர் என்று ரியல் எஸ்டேட் ஆள் சொல்லி விற்றபோது மனைக்கு 10 அடி கீழேயா இல்லை மேலேயான்னு கேட்டாங்களா😜 ? தங்கக் காசு இலவசம் ஒண்ணு வாங்கினால் ஒண்ணு பிரீ ன்னு ஓசி வாங்கினீங்களா ? அனுபவி😡 ராஜா😛 அனுபவி
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
25-நவ-202013:20:35 IST Report Abuse
Ramesh Sargam பணத்திற்காக நீர்தேக்கங்களை - ஏறி, குளம், குட்டை, ஆறு - அரசு ரியல் எஸ்டேட் காரர்களிடம் 'பெறவேண்டியதை' பெற்று கட்டிடங்கள் கட்ட அனுமதி அளித்தது. மக்களும், தங்களுக்கு வாழ ஒரு வீடு வேண்டும் என்கிற ஆசையில், அது ஏறி, குளம், குட்டை என்று தெரிந்த பின்பும், ஆசைக்காக வாங்கி வீடுகளை கட்டிக்கொண்டனர். ஆனால், மழை காலங்களில், மழை நீர், நீர்தேக்கம் இல்லாததால், வீடுகளை சூழ்ந்த்துக்கொண்டு மக்களை அச்சுறுத்துகிறது. தப்பு யார் பக்கம்? மழை நீரை நாம் எப்படி குறைகூறமுடியும். நம்மை நாமே தான் குறைகூறிக்கொள்ளவேண்டும். போகட்டும். இனி மேலாவது நாம் திருந்துவோமா? சான்ஸ்சே இல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X