பொது செய்தி

தமிழ்நாடு

மைசூருக்கு பஸ் இயக்கம்: திருப்பூரில் எதிர்பார்ப்பு

Added : நவ 25, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் இருந்து மைசூரு, பெங்களூருக்கு பஸ் இயக்கம் துவங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகம் - கர்நாடகம் இடையே போக்குவரத்து அனுமதி அளித்த மறுநாளே மைசூரில் இருந்து திருப்பூருக்கு அந்த மாநில பஸ் இயக்கப்பட்டது. தினமும் மதியம், திருப்பூர் - காமராஜர் ரோடு, தற்காலிக பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விட்டு, மைசூருக்கு பஸ் திரும்புகிறது.கலெக் ஷனை

திருப்பூர்:திருப்பூரில் இருந்து மைசூரு, பெங்களூருக்கு பஸ் இயக்கம் துவங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகம் - கர்நாடகம் இடையே போக்குவரத்து அனுமதி அளித்த மறுநாளே மைசூரில் இருந்து திருப்பூருக்கு அந்த மாநில பஸ் இயக்கப்பட்டது. தினமும் மதியம், திருப்பூர் - காமராஜர் ரோடு, தற்காலிக பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விட்டு, மைசூருக்கு பஸ் திரும்புகிறது.கலெக் ஷனை பொருட்டாக நினைக்காமல், பயணிகள் நலனுக்காக, அந்த பஸ் இயக்கம் தொடர்கிறது. ஆனால், திருப்பூரில் இருந்து கர்நாடகாவுக்கு பஸ் இயக்கம் இன்னமும் துவங்கவில்லை.கொரோனாவுக்கு முன் திருப்பூரில் இருந்து, 2 பஸ்கள் சத்தி, சாம்ராஜ்நகர் வழியாக மைசூருக்கு இயக்கப்பட்டது. பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு வந்து விட்டு, மீண்டும் பெங்களூருக்குபுறப்பட்டு சென்றது.இந்த மூன்று பஸ்களின் இயக்கமும் இதுவரை துவங்கவில்லை. திருப்பூரில் இருந்து கர்நாடக செல்லும் விரும்பும் பயணிகள் அவதிப்படுகின்றனர். திருப்பூர் மண்டல மேலாளர் (வணி கம்) குணசேகரன் கூறுகையில், ''போதிய பயணிகள் இருந்தால் பஸ் இயக்கப்படும். இரவில் பயணிகள் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவில் இல்லாததால், பஸ் இயக்கம் துவங்கவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X