திருப்பூர்:புயல், வெள்ள நேரத்தில், முன்னெச்சரிக்கையுடன் இருப்பது தொடர்பாக, தமிழக பேரிடர் மேலாண்மை கமிஷன் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ, வைரலாக பரவி வருகிறது.தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், 'நிவர்' புயல் வெள்ள சேதம் தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 3.45 நிமிடம் ஒளிபரப்பாகும், 'கார்டூன்' வீடியா வெளியிடப்பட்டுள்ளது.கிராமத்தில் கனமழை பெய்யும் நேரத்தில், ரேடியோ அறிவிப்பு வெளியாகிறது; வீட்டில் உள்ள சிறுமி அதை கேட்பது போல் துவங்குகிறது. புயல்மழை தொடர்பான வதந்திகளை நம்பக்கூடாது; அரசு வெளியிடும் அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும்.வீட்டில் இருந்து முகாம்களுக்கு செல்ல நேரிட்டால், முக்கிய ஆவணங்களை பத்திரப்படுத்த வேண்டும்; சில ஆவணங்களை கையில் வைத்துக்கொள்ளலாம். மருந்து மாத்திரை, 'டார்ச்' லைட், திண்பண்டம் என, தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு, வீட்டில் மின் இணைப்பை துண்டித்து செல்ல வேண்டும்.அரசு வெளியிடும் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்புகளை கேட்டு, முறையாக பின்பற்ற வேண்டும் என, 'கார்டூன்' வீடியோவில் குறிப்பிடப்படுகிறது. விழிப்புணர்வு வீடியோ, 'வாட்ஸ் ஆப், 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், வைரலாக பரவி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE