பொது செய்தி

தமிழ்நாடு

'மைட்டோகான்' ஆய்வகத்தில் ஆர்.டி.பி.சி.ஆர்., மையம் திறப்பு

Added : நவ 25, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள மைட்டோகான் ஆய்வகத்தில் ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே மைட்டோகான் ஆய்வகம் உள்ளது. இங்கு, அனைத்து வைரஸ்களையும் பரிசோதனை வாயிலாக அறிந்து கொள்ளும் வகையில், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.இதற்கென, தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் லேப்

திருப்பூர்:திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள மைட்டோகான் ஆய்வகத்தில் ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே மைட்டோகான் ஆய்வகம் உள்ளது. இங்கு, அனைத்து வைரஸ்களையும் பரிசோதனை வாயிலாக அறிந்து கொள்ளும் வகையில், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.இதற்கென, தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் லேப் டெக்னீசியன் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, கொரோனா பரவல் காணப்படும் நிலையில், சளி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோரின் பரிசோதனை முடிவு, 6 மணி நேரத்தில் தெரிவிக்கப்படும். இதற்கு, குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த மையத்தை, இந்திய மருத்துவ சங்க திருப்பூர் கிளை தலைவர் பழனிசாமி துவக்கி வைத்தார்.ஸ்ரீ குமரன் மருத்துவ மனை நிர்வாக இயக்குனர் செந்தில்குமரன், நிர்வாகிகள் ராஜ்குமார், ரமேஷ், பொம்முசாமி ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக, 'மைட்டோகான்' ஆய்வக நிர்வாக இயக்குனர் சம்பத்குமார், வரவேற்றார். சூர்யா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X