திருப்பூர்:தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், 'இன்ஸ்பையர் மானக் விருது'க்கான மாநில அளவிலான கண்காட்சியை இணையவழியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதுகுறித்து அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் தேசிய அறிவியல் புத்தாக்க நிறுவனம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் நடப்பில் இருப்பதால், கண்காட்சியை இணையவழியில் நடத்த புதிய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட கணினி அல்லது மொபைல் போன் 'சாப்ட்வேர்' இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. 'MANAK competition APP' என்ற செயலியை, 'கூகுள் பிளே ஸ்டோரில்' பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தங்கள் அறிவியல் செயல்முறைகளை வீடியோவாக தயாரித்து இச்செயலியில் டிச., 25க்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE