சென்னை: நிவர் புயலால் பாதிப்பு ஏற்பட்டால், உதவி செய்வதற்கு தயாராக உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு 12 மீட்பு குழுக்கள், 2 தொழில்நுட்ப குழுக்கள் தயாராக உள்ளதாகவும் இந்திய ராணுவம் கூறியுள்ளது.

ஏற்கனவே, நிவர் புயலில் பாதிப்பில் இருந்து மக்களை காக்க மீட்பு பணியில் ஈடுபட 5 வெள்ள மீட்பு குழுவினர் மற்றும் நீச்சல் குழுவினர் தயராக உள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்திருந்தது.தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் ஐஎன்எஸ் ஜோதி நிறுத்தப்படும் என தெரிவித்திருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE