ஊட்டி:'நீலகிரியில்,'நிவர் புயல்' பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊட்டியில், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில், 'நிவர் புயல்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மலைப்பகுதியாக இருப்பதால், அதிக காற்றும், மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், குந்தா, பந்தலூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் 'நிவர் புயல்' காரணமாக, பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்தால், அவசர கால வாகனங்கள்; மின் வசதி; 40 பேரிடர் சிறப்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. தீயணைப்பு துறை சார்பில், நவீன மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதன் செயல் விளக்கங்களும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடந்துள்ளது.மேலும், தாழ்வான, மண் சரிவு ஏற்படகூடிய இடங்களில் வீடுகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கு, 456 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதால், பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. அவசர உதவிகளுக்கு, 1077க்கு தொடர்பு கொள்ள வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE