ஊட்டி:ஊட்டியில் உள்ள இளம் சிறார் நீதி குழுமத்தில், 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.ஊட்டி ஏ.டி.சி.,பகுதியில், இளம் சிறார் நீதி குழுமம் செயல்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில், 18 வயதுக்கு குறைவானவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால், அவர்கள் கோவையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் பராமரிக்கப்படுகின்றனர். வழக்கு விசாரணைக்காக, ஒவ்வொரு முறையும் கோவையில் இருந்து ஊட்டிக்கு வந்து செல்கின்றனர்.தற்போது, கொரோனா தொற்றால், சிறுவர்கள் கோவையில் இருந்து ஊட்டிக்கு வந்து செல்ல பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இந்நிலையில், ஊட்டியில் உள்ள இளம் சிறார் நீதி குழுமத்தில் வழக்கு விசாரணைகளை, வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்த திட்டமிட்டனர். அதன்படி, நேற்று, ஊட்டியில் வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சியை, நடுவர் பாரதிராஜன் துவக்கி வைத்தார்.'ஊட்டியில், இந்த இளம் சிறார் நீதி குழுமம், 2013ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதுவரை, 98 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது. 45 வழக்குகள் நிலுவையில் உள்ளன,' என, தெரிவிக்கப்பட்டது. நீதி குழும உறுப்பினர்கள் அருள்தாஸ், பிச்சையம்மாள், குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் தீபா, எமி மாலு உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE