சேலம்: சேலம், ஓமலூர் பிரதான சாலையில் உள்ள வணிக நிறுவனங்களில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், நேற்று ஆய்வு செய்தார். அப்போது, நுழைவாயிலில் கை கழுவும் வசதி, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை, சானிடைசர், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை முறையாக கடைப்பிடிக்கின்றனரா என, பார்வையிட்டார். அத்துடன், உரிய அறிவுரை வழங்கி, வணிக நிறுவனங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்க, எட்டு குழுவினர், தொடர்ந்து கண்காணித்து வருவதாக எச்சரித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE