பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி உதவிக்கு 30 கடைசி நாள்

Added : நவ 25, 2020
Share
Advertisement
சேலம்: முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர், கல்வி உதவி பெற, வரும், 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர், அவர்களை சார்ந்த சிறார்களுக்கு, 2020 - 21ல், கல்வி உதவி கோரி விண்ணப்பிக்க, மதிப்பெண் சான்றிதழ் பதிவேற்றத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்திடம் பெறப்பட்ட

சேலம்: முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர், கல்வி உதவி பெற, வரும், 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர், அவர்களை சார்ந்த சிறார்களுக்கு, 2020 - 21ல், கல்வி உதவி கோரி விண்ணப்பிக்க, மதிப்பெண் சான்றிதழ் பதிவேற்றத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்திடம் பெறப்பட்ட தேர்ச்சி சான்று, நடப்பு கல்வியாண்டில் படிக்கும் பதிவுச்சான்று போதுமானது. ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வரை விண்ணப்பிக்க, நவ., 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தற்போது, 10, பிளஸ் 2 வகுப்புக்கும் அவகாசம், நவ., 30 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, www.ksb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு, 0427 - 2902903 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X