சேலம்: முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர், கல்வி உதவி பெற, வரும், 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர், அவர்களை சார்ந்த சிறார்களுக்கு, 2020 - 21ல், கல்வி உதவி கோரி விண்ணப்பிக்க, மதிப்பெண் சான்றிதழ் பதிவேற்றத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்திடம் பெறப்பட்ட தேர்ச்சி சான்று, நடப்பு கல்வியாண்டில் படிக்கும் பதிவுச்சான்று போதுமானது. ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வரை விண்ணப்பிக்க, நவ., 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தற்போது, 10, பிளஸ் 2 வகுப்புக்கும் அவகாசம், நவ., 30 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, www.ksb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு, 0427 - 2902903 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE