பொது செய்தி

தமிழ்நாடு

உபரிநீர் கால்வாய் பணி: துரிதமாக முடிக்க உத்தரவு

Added : நவ 25, 2020
Share
Advertisement
சேலம்: குமரகிரி ஏரியின், உபரிநீர் கால்வாய் பணியை துரிதமாக முடிக்க, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.சேலம், சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து, மழைக்காலங்களில் உபரிநீர் வெளியேறி, சிவதாபுரம், அம்மன் நகர் பகுதிகளில் புகுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்பணியை, கலெக்டர் ராமன், நேற்று பார்வையிட்டார்.பின், அவர் கூறியதாவது: மழைக்காலங்களில்,

சேலம்: குமரகிரி ஏரியின், உபரிநீர் கால்வாய் பணியை துரிதமாக முடிக்க, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம், சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து, மழைக்காலங்களில் உபரிநீர் வெளியேறி, சிவதாபுரம், அம்மன் நகர் பகுதிகளில் புகுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்பணியை, கலெக்டர் ராமன், நேற்று பார்வையிட்டார்.

பின், அவர் கூறியதாவது: மழைக்காலங்களில், தாமரை ஏரி, தளவாய்பட்டி ஏரி, அடுத்தடுத்து நிரம்பி, அதன் உபரிநீர் சேலத்தாம்பட்டி ஏரியை வந்தடைவதால், அதன் உபரிநீர், ஊருக்குள் புகுந்துவிடுகிறது. அதை தடுக்க, நீர் வழிப்போக்கிகள் அமைத்து, வாய்க்கால் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால், பாதிப்பை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, குமரகிரி ஏரியின் உபரிநீர் வெளியேறும் பகுதியை பார்வையிட்டு, அதன் வாய்க்கால் சீரமைப்பு பணியை, விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X