சேலம்: பள்ளி மாணவர்களுக்கு, ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது. இதுகுறித்து, சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முல்லையரசு கூறயதாவது: குழந்தைகள் தினத்தையொட்டி, சேலம் அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது. ஒன்று முதல், மூன்றாம் வகுப்புக்கு, இயற்கை காட்சி; நான்கு முதல், ஆறாம் வகுப்புக்கு, தேச தலைவர்கள்; ஏழு முதல், ஒன்பதாம் வகுப்புக்கு, 'கொரோனா விழிப்புணர்வு' தலைப்புகளில் பங்கேற்கலாம். மாணவர்கள், 'ஏ4' அளவு தாளில் வரைந்து, தங்கள் படைப்புகளை நவ., 30, மாலை, 5:00 மணிக்கு முன், அரசு அருங்காட்சியகத்தில் நேரிலோ, தபாலிலோ அனுப்பலாம். வரைபட தாளின் பின்புறம், தங்கள் பெயர், வகுப்பு, முகவரி, தொலைபேசி எண் எழுதவும். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். பங்கேற்பாளருக்கு, இ - சான்றிதழ் அனுப்பப்படும். விபரம் பெற, 94434 78024 என்ற எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE