பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 'நிவர்' புயலை சமாளிக்க நீச்சல் வீரர், பாம்பு பிடிப்போர் தயார்

Added : நவ 25, 2020
Share
Advertisement
சேலம்: புயல் பாதிப்பை சமாளிக்க, சேலம் மாவட்டத்தில் நீச்சல் வீரர், பாம்பு பிடிப்போர், மரம் வெட்டுவோர் தயாராக உள்ளனர்.'நிவர்' புயலால், இன்று முதல், மூன்று நாள், சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்று மழையால், மரங்கள் சாலையில் விழுந்து பாதிப்பு ஏற்படக்கூடும். நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விஷ ஜந்துக்கள், குடியிருப்பு

சேலம்: புயல் பாதிப்பை சமாளிக்க, சேலம் மாவட்டத்தில் நீச்சல் வீரர், பாம்பு பிடிப்போர், மரம் வெட்டுவோர் தயாராக உள்ளனர்.


'நிவர்' புயலால், இன்று முதல், மூன்று நாள், சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்று மழையால், மரங்கள் சாலையில் விழுந்து பாதிப்பு ஏற்படக்கூடும். நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விஷ ஜந்துக்கள், குடியிருப்பு பகுதிகளில் நுழையும் என்பதால், சேலம் மாவட்டம் முழுதும், வருவாய்த்துறை சார்பில் நீச்சல் வீரர்கள், மரம் வெட்டுவோர், பாம்பு பிடிப்போர் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேட்டூர் தாலுகா, நகரம், அதன் சுற்றுக்கிராமங்கள், மேட்டூர் அணை, காவிரி கரையோரம் உள்ளதால், மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால், தாலுகா முழுதும், வருவாய் கிராமம் வாரியாக, பாம்பு பிடிப்பவர், மரம் வெட்டுவோர், நீச்சல் வீரர்கள் என, 114 பேரை வருவாய்த்துறையினர் தேர்வு செய்து, தயாராக இருக்க அறிவுறுத்தியுள்ளனர். இதுதவிர, தாலுகா முழுதும், முதன்மை கண்காணிப்பு குழுவினர் - 144 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சேதம் குறித்து, முதல் தகவல் கொடுப்பர். அதைத்தொடர்ந்து வருவாய்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவர். இதுபோல், சேலம் மாவட்டம் முழுதும், பாம்பு பிடிப்பவர், மரம் வெட்டுவோர், நீச்சல் வீரர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு, தயாராக இருக்க, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், மின் ஊழியர், போலீசார், தீயணைப்பு மீட்பு குழுவினர், உள்ளாட்சி அலுவலர்களும் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X