சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை

Added : நவ 25, 2020
Share
Advertisement
மகுடஞ்சாவடி: வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள், 35 ஆயிரம் ரூபாய், நகைகளை கொள்ளையடித்து சென்றனர். மகுடஞ்சாவடி, காகாபாளையம் தபால் அலுவலகம் அருகே, வாடகை வீட்டில் வசிப்பவர் தனபால், 42; 'ஆன்லைன்' மூலம், தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சு, 32; ஆட்டையாம்பட்டியிலுள்ள தனியார் மருத்துவமனையில், பிசியோதெரபிஸ்டாக பணிபுரிகிறார். இவர், நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, வீட்டை

மகுடஞ்சாவடி: வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள், 35 ஆயிரம் ரூபாய், நகைகளை கொள்ளையடித்து சென்றனர். மகுடஞ்சாவடி, காகாபாளையம் தபால் அலுவலகம் அருகே, வாடகை வீட்டில் வசிப்பவர் தனபால், 42; 'ஆன்லைன்' மூலம், தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சு, 32; ஆட்டையாம்பட்டியிலுள்ள தனியார் மருத்துவமனையில், பிசியோதெரபிஸ்டாக பணிபுரிகிறார். இவர், நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, வீட்டை பூட்டி விட்டு, மருத்துவமனைக்கு சென்றார். முன்னதாக, தனபால், கேரளாவிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மஞ்சு, அன்றிரவு, 8:00 மணிக்கு, வீட்டுக்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த, 35 ஆயிரம் ரூபாய், அரை பவுன் மோதிரம், கால் பவுன் கம்மல், 'டிவி', மடிக்கணினி கொள்ளைபோனது தெரிந்தது. நேற்று, தனபால் புகார்படி, மகுடஞ்சாவடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X