ஈரோடு: ஈரோடு மாவட்ட விவசாயிகள், பயிர் காப்பீடு செய்வது சிறந்தது. ஒரு ஏக்கர் நெல்லுக்கு, 502.50 ரூபாய் காப்பீடு தொகையாகும். தற்போது நிவர் புயலால், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், வரும், 30க்குள் காப்பீடு செய்தால், இழப்பீட்டை பெறலாம். புயலுக்கு பின் காப்பீடு செய்வதை நிறுவனம் ஏற்காது. மாவட்டத்தில், 28 பிர்காவில் உள்ள விவசாயிகள், காப்பீடு நிறுவன முகவரை, 96779 12021 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, பயிர் காப்பீடு தொடர்பான விரிவான விபரங்களை பெறலாம். இத்தகவலை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE