பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்களுக்கான கருத்தடை: வரும் 28 முதல் துவக்கம்

Added : நவ 25, 2020
Share
Advertisement
ஈரோடு: மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், ஆண் கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு ரத துவக்க விழா, ஈரோட்டில் நேற்று நடந்தது. ரதத்தை துவக்கி, துண்டு பிரசுரங்களை வழங்கி, கலெக்டர் கதிரவன் கூறியதாவது: ஆண்களுக்கான நிரந்தர நவீன கருத்தடை இலவச சிறப்பு சிகிச்சை முகாம், மாவட்டத்தில் அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வரும், 28 முதல், டிச.,8 வரை நடக்கிறது.

ஈரோடு: மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், ஆண் கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு ரத துவக்க விழா, ஈரோட்டில் நேற்று நடந்தது. ரதத்தை துவக்கி, துண்டு பிரசுரங்களை வழங்கி, கலெக்டர் கதிரவன் கூறியதாவது: ஆண்களுக்கான நிரந்தர நவீன கருத்தடை இலவச சிறப்பு சிகிச்சை முகாம், மாவட்டத்தில் அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வரும், 28 முதல், டிச.,8 வரை நடக்கிறது. வரும், 28ல் மொடக்குறிச்சி, 30ல் சிவகிரியில் நடக்கிறது. டிச.,1ல் ஈரோடு காந்திஜி சாலை மாநகராட்சி மருத்துவமனை, சித்தோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடக்கிறது. டிச.,2ல் டி.என்.பாளையம், 3ல் சென்னிமலை, 4ல் உக்கரம் மற்றும் நம்பியூரில், 5ல் மைலம்பாடி மற்றும் புஞ்சை புளியம்பட்டி, 7ல் குருவரெட்டியூர், 8ல் தாளவாடி மற்றும் அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் முகாம் நடக்கிறது. நடப்பாண்டு, 186 ஆணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோருக்கு, 1,100 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார். இணை இயக்குனர் கோமதி, துணை இயக்குனர் சவுண்டம்மாள், துணை இயக்குனர் ராஜசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X