பொது செய்தி

தமிழ்நாடு

கீழ்பவானியில் டிச.,30 வரை நீர் திறக்க வலியுறுத்தல்

Added : நவ 25, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம், கலெக்டர் கதிரவன் தலைமையில், டி.ஆர்.ஓ., கவிதா முன்னிலையில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் துளசிமணி பேசியதாவது: பவானிசாகர் அணையில் நீர் இருப்பு திருப்தியாக உள்ளதால், நடப்பு பாசனத்துக்கு டிச.,15ல் நீர் நிறுத்தப்படுவதை மாற்றி, டிச.,30 வரை நீர் திறக்க வேண்டும். ஜன., மாதம் புஞ்சை பயிருக்கு நீர் திறக்க,

ஈரோடு: ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம், கலெக்டர் கதிரவன் தலைமையில், டி.ஆர்.ஓ., கவிதா முன்னிலையில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் துளசிமணி பேசியதாவது: பவானிசாகர் அணையில் நீர் இருப்பு திருப்தியாக உள்ளதால், நடப்பு பாசனத்துக்கு டிச.,15ல் நீர் நிறுத்தப்படுவதை மாற்றி, டிச.,30 வரை நீர் திறக்க வேண்டும். ஜன., மாதம் புஞ்சை பயிருக்கு நீர் திறக்க, தற்போதே அறிவிப்பு செய்தால், நிலக்கடலையை டிச.,15க்குப்பின் விதைப்பு செய்வார்கள். கீழ்பவானி வாய்க்காலில், 10 கி.மீ.,க்கு ஒரு இடத்தில் நீர் அளவீடு கருவி அமைக்க வேண்டும்.

* காளிங்கராயன் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழு அளவு நீர் செல்ல வழி செய்ய வேண்டும். மரவள்ளி கிழங்கு விலை சரிந்துள்ளதால், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு டன், 6,000 ரூபாய் என நிர்ணயிக்க வேண்டும். மஞ்சள், எள், கரும்பு, மக்காசோளத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து, அரசு கொள்முதல் செய்ய வேண்டும். மொடக்குறிச்சி பகுதியில் அதிகமாக கால்நடை திருட்டு போவதை தடுக்க வேண்டும். பயிர் காப்பீடு இழப்பீடு, பல ஆண்டாக கிடைக்கவில்லை.


* கலெக்டர் கதிரவன்: கீழ்பவானியில் டிச.,30 வரை நீர் திறக்க, அரசுக்கு பரிந்துரைக்கப்படும். கீழ்பவானி வாய்க்காலில் நீர் அளவீடு கருவி, தற்போது மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணியின்போது செய்யப்படும். மரவள்ளி கிழங்குக்கு விலை நிர்ணயிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். மஞ்சளுக்கு விலை நிர்ணயிக்க, ஏற்கனவே அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. மீண்டும் பரிந்துரைப்போம். மொடக்குறிச்சி பகுதியில் கால்நடை திருட்டை தடுக்க, போலீஸ் ரோந்தை அதிகப்படுத்த வலியுறுத்துவோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X