பொது செய்தி

தமிழ்நாடு

10 மாதமாக ஏனோ பூட்டு; போராட்ட அறிவிப்பால் வி.ஏ.ஓ., ஆபீஸ் திறப்பு

Added : நவ 25, 2020
Share
Advertisement
மொடக்குறிச்சி: கொடுமுடி, நஞ்சை கொளாநல்லியில் வி.ஏ.ஓ., அலுவலகம் செயல்படுகிறது. கடந்த, 10 மாதமாக அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். இதனால் குட்டப்பாளையம் வி.ஏ.ஓ.,வை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டது. குட்டப்பாளையத்துக்கு பஸ் வசதி இல்லாததால், நஞ்சை கொளாநல்லி வி.ஏ.ஓ., அலுவலகத்தை திறக்க, மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட நிர்வாகம், வருவாய்

மொடக்குறிச்சி: கொடுமுடி, நஞ்சை கொளாநல்லியில் வி.ஏ.ஓ., அலுவலகம் செயல்படுகிறது. கடந்த, 10 மாதமாக அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். இதனால் குட்டப்பாளையம் வி.ஏ.ஓ.,வை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டது. குட்டப்பாளையத்துக்கு பஸ் வசதி இல்லாததால், நஞ்சை கொளாநல்லி வி.ஏ.ஓ., அலுவலகத்தை திறக்க, மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட நிர்வாகம், வருவாய் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனாலும், நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், பூட்டப்பட்ட வி.ஏ.ஓ., அலுவலக்ம முன், மலர் வளையம் வைத்து, பூஜை செய்து, போராட்டத்தில் ஈடுபடுவதாக, நேற்று முன்தினம் அறிவித்தது. சமூக வலைதளங்களில் இந்த தகவல் பரவியதால், கொடுமுடி தாசில்தார் ஸ்ரீதர், வருவாய் அலுவலர்கள், நேற்று வி.ஏ.ஓ., அலவலகத்தை திறந்து பணி மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X