சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியரை திருடன் என விளாசிய மக்கள்; 'குடும்ப தகராறில் பேதலித்த புத்தியால் பரிதாபம்'

Added : நவ 25, 2020
Share
Advertisement
சத்தியமங்கலம்: சத்தியில், கார் பட்டறையில் புகுந்த டாஸ்மாக் ஊழியரை, திருடன் என நினைத்து மக்கள் விளாசியதால், பரபரப்பு ஏற்பட்டது.சத்தியமங்கலத்தில், மேட்டுப்பாளையம் சாலை காந்தி நகரில், முருகேசன் என்பவர் கார் பட்டறை வைத்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல், பட்டறையை திறந்தார். அப்போது உள்ளே இருந்த ஒரு ஆசாமி, ஒரு கார் கதவை திறக்க முயன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

சத்தியமங்கலம்: சத்தியில், கார் பட்டறையில் புகுந்த டாஸ்மாக் ஊழியரை, திருடன் என நினைத்து மக்கள் விளாசியதால், பரபரப்பு ஏற்பட்டது.


சத்தியமங்கலத்தில், மேட்டுப்பாளையம் சாலை காந்தி நகரில், முருகேசன் என்பவர் கார் பட்டறை வைத்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல், பட்டறையை திறந்தார். அப்போது உள்ளே இருந்த ஒரு ஆசாமி, ஒரு கார் கதவை திறக்க முயன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். முருகேசன் கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் திரண்டு ஆசாமியை பிடித்தனர். தர்ம அடி கொடுத்து, சத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், கொண்டப்பநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி, 35, என்பதும், பவானிசாகரை அடுத்த ஒத்தப்பனையில், டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிவதும் தெரிந்தது. பழனிச்சாமி வீட்டில், இரண்டு நாட்களாக சண்டை ஏற்பட்டதாகவும், இதனால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல், அவர் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கார் பட்டறையில் நுழையும் முன், அப்பகுதியில் ஒரு வீட்டில் புகுந்தவரை, மக்கள் அடித்து துரத்தியதும் தெரியவந்தது. சத்தி அரசு மருத்துவமனைக்கு, அவரை சிகிச்சைக்கு அனுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X