பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பெண்கள் கல்லூரியில் கணித்தமிழ் பேரவை துவக்கம்

Added : நவ 25, 2020
Share
Advertisement
காரிமங்கலம்: சென்னை தமிழ் இணையக்கல்வி கழகம் சார்பில், காரிமங்கலம் அரசு பெண்கள் கல்லூரியில் நடந்த, கணித்தமிழ் பேரவை துவக்க விழாவுக்கு, கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். தர்மபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ஜோதிவெங்கடேஸ்வரன் பேசியதாவது: உலகம் முழுவதும் மக்கள் பேசக்கூடிய பழமையான லத்தின், கிரேக்கம், எபிரேயம் போன்ற மொழிகள் வரிசையில், தமிழ்மொழி வரி

காரிமங்கலம்: சென்னை தமிழ் இணையக்கல்வி கழகம் சார்பில், காரிமங்கலம் அரசு பெண்கள் கல்லூரியில் நடந்த, கணித்தமிழ் பேரவை துவக்க விழாவுக்கு, கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். தர்மபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ஜோதிவெங்கடேஸ்வரன் பேசியதாவது: உலகம் முழுவதும் மக்கள் பேசக்கூடிய பழமையான லத்தின், கிரேக்கம், எபிரேயம் போன்ற மொழிகள் வரிசையில், தமிழ்மொழி வரி வடிவத்திலும், பேச்சு வடிவத்திலும் தொன்மையான உயர் தனிச்செம்மொழியாக உள்ளது. சமஸ்கிருதம் கோவில் மொழியாக உள்ளது. புதிய அறிவியல் தொழிற்நுட்ப சொற்களுக்கு, இணையான தமிழ்சொற்களை உருவாக்க வேண்டும். கம்ப்யூட்டர் வழியாக தமிழ் மொழியை பயன்படுத்துவது, புதிய சொற்களை உருவாக்குவது, சமுதாயத்திற்கு சொற்களை உருவாக்கி தருவது நமது கடமையாகும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, 'கணித்தமிழ் அறிமுகம்' என்ற தலைப்பில், கிருஷ்ணகிரி அரசு பெண்கள் கல்லூரி பேராசிரியை தனலெட்சுமி பேசினார். மூன்றாம் ஆண்டு படிக்கும், 100 மாணவியர் ஆன்லைன் மூலம் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, தமிழ்த்துறை தலைவர் செந்தில்குமார், கம்ப்யூட்டர் அறிவியல்துறை தலைவர் அருள்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X