அரூர்: அரூர் அருகே, இயற்கை விவசாயம் குறித்து, வேளாண் கல்லூரி மாணவியர், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். அண்ணாமலை பல்கலை கழகத்தில், வேளாண் பட்டப்படிப்பு பயின்று வரும், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வாழைத்தோட்டத்தை சேர்ந்த மாணவியர் சவுந்தர்யா, தேவிகா ஆகிய இருவரும், தங்கள் கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். அதில், இயற்கை விவசாயம் செய்வதன் மூலம், கிடைக்கும் கூடுதல் மகசூல், செயற்கை உரங்களை பயன்படுத்துவதால், மண் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கினர். மேலும், புங்கன், வேம்பு உள்ளிட்ட விவசாய நிலங்களில் இருக்கக்கூடிய மரம், செடி கொடிகளை மண்ணுக்கு உரம் ஆக்குவது குறித்தும், மாடி தோட்டங்கள் அமைப்பது, காய்கறிகள் வளர்ப்பது குறித்தும் எடுத்துரைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE