பொது செய்தி

தமிழ்நாடு

வாணியாறு அணைக்கு நீர்வரத்து குறைவு

Added : நவ 25, 2020
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: வாணியாறு அணைக்கு, நேற்று நீர்வரத்து குறைந்ததால், அணையில் இருந்து வினாடிக்கு, 30 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிக்காட்டில், வாணியாறு அணை உள்ளது. சேர்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில், அமைந்துள்ள அணைக்கு, ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து, நீர்வரத்து வருகிறது. சில வாரங்களுக்கு முன், பெய்த தொடர்

பாப்பிரெட்டிப்பட்டி: வாணியாறு அணைக்கு, நேற்று நீர்வரத்து குறைந்ததால், அணையில் இருந்து வினாடிக்கு, 30 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிக்காட்டில், வாணியாறு அணை உள்ளது. சேர்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில், அமைந்துள்ள அணைக்கு, ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து, நீர்வரத்து வருகிறது. சில வாரங்களுக்கு முன், பெய்த தொடர் மழையால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. கடந்த, 14ல், அணையின் மொத்த கொள்ளளவான, 65.27 அடியில், நீர்மட்டம், 63 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும், உபரி நீர் முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் அணைக்கு, 50 கனஅடி நீர்வரத்து வந்த நிலையில், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 30 கனஅடியாக குறைந்தது. தொடர்ந்து, 30 கனஅடி நீரும் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X