சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரண்டு நாட்களுக்கு பின் சிறுவன் சடலம் மீட்பு

Added : நவ 25, 2020
Share
Advertisement
பென்னாகரம்: ஒகேனக்கல், காவிரியாற்றில் அடித்து செல்லப்பட்ட, ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரில், தாய், மகள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று மகனின் சடலமும் மீட்கப்பட்டது.சேலத்தை சேர்ந்தவர் ரியாசுதின் 46; பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த, 22ல், குடும்பத்தில் உள்ள ஐந்து பேருடன், ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்தார். பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு, மாலை

பென்னாகரம்: ஒகேனக்கல், காவிரியாற்றில் அடித்து செல்லப்பட்ட, ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரில், தாய், மகள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று மகனின் சடலமும் மீட்கப்பட்டது.


சேலத்தை சேர்ந்தவர் ரியாசுதின் 46; பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த, 22ல், குடும்பத்தில் உள்ள ஐந்து பேருடன், ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்தார். பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு, மாலை ஆலம்பாடி அருகே, நாடார் கொட்டாய் பகுதிக்கு சென்று குளித்தனர். ரியாசுதீன், அவர் மனைவி அபிதா, 38, மகள் அபாஸ் பாத்திமா, 14, மகன் முகமது ரபாஸ், 10, உள்ளிட்ட நான்கு பேரும் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். கரையில் இருந்த மூத்த மகன் முகமது அஸ்வாப், 18, ரியாசுதீனை மட்டும் காப்பாற்றி கரை சேர்த்துள்ளார். ஒகேனக்கல் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், பரிசல் ஓட்டிகளின் உதவியோடு, அன்றே அபிதாவை சடலமாக மீட்டனர். மேலும், அவரின் மகன், மகள் உள்ளிட்ட இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அபாஸ் பாத்திமா சடலம், ஊட்டமலை பரிசல் துறையில் கரை ஒதுங்கியது. மகனை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்த நிலையில், நேற்று காலை தொம்பச்சிக்கல் என்ற இடத்தில், முகமது ரபாஸ் சடலம் மீட்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X