பொது செய்தி

தமிழ்நாடு

'நிவர்' புயலால் கனி மார்க்கெட்டில் விற்பனை சரிவு

Added : நவ 25, 2020
Share
Advertisement
ஈரோடு: 'நிவர்' புயல் காரணமாக, ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தையில் விற்பனை சரிந்தது. ஈரோடு, கனிமார்க்கெட் வாரச்சந்தை திங்கள் இரவு தொடங்கி, செவ்வாய் மாலை வரை நடக்கிறது. இதில் தினசரி கடைகள், 340, வாரச்சந்தை கடைகள் என, 740 போடப்படுகிறது. தீபாவளி திருவிழாவின் போது, அக்டோபர் கடைசி வாரத்தில் துவங்கி, நவ., 13 வரை, 150 கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளி துணிகளின் விற்பனை களைகட்டியது. கொரோனாவால்

ஈரோடு: 'நிவர்' புயல் காரணமாக, ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தையில் விற்பனை சரிந்தது. ஈரோடு, கனிமார்க்கெட் வாரச்சந்தை திங்கள் இரவு தொடங்கி, செவ்வாய் மாலை வரை நடக்கிறது. இதில் தினசரி கடைகள், 340, வாரச்சந்தை கடைகள் என, 740 போடப்படுகிறது. தீபாவளி திருவிழாவின் போது, அக்டோபர் கடைசி வாரத்தில் துவங்கி, நவ., 13 வரை, 150 கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளி துணிகளின் விற்பனை களைகட்டியது. கொரோனாவால் வாழ்விழந்த ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் தீபாவளி விற்பனையால் மகிழ்ச்சியடைந்தனர். தீபாவளிக்கு பிறகு நேற்று நடந்த சந்தையில், விற்பனை சரிந்து, 30 லட்சம் ரூபாய் அளவுக்கு மட்டுமே விற்பனை இருந்தது.

இது குறித்து, ஈரோடு கனிமார்க்கெட் வாரச்சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது: தீபாவளியின் போது, எதிர்பாத்த அளவு வியாபாரம் இருந்தது. நேற்று நடந்த சந்தையில், 15 சதவீதம் மட்டுமே காட்டன் துணிகள் மற்றும் உள்ளாடைகள் விற்பனை ஆகின. நிவர் புயல் காரணமாக தஞ்சாவூர், நாகை, சென்னை, கடலூர், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை வியாபாரிகள் வரவில்லை. அதே போல கேரளா, கர்நாடகா, ஆந்திரா வியாபாரிகளும் வரவில்லை. இதனால் விற்பனையில் சரிவு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X