சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொடுமுடி அருகே கார் கவிழ்ந்ததில் விசைத்தறி உரிமையாளர் 4 பேர் பலி

Added : நவ 25, 2020
Share
Advertisement
மொடக்குறிச்சி: கொடுமுடி அருகே, வாய்க்கால் பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில், ஒரே ஊரை சேர்ந்த, விசைத்தறி உரிமையாளர்கள் நான்கு பேர் பலியாகினர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சீனாபுரம் அருகேயுள்ள வீரணம்பாளையத்தை சேர்ந்தவர்கள் மணி, 50, ரகுநாதன், 41, சகோதரர்கள் கிருஷ்ணசாமி, 44, ராஜா, 40; விசைத்தறி உரிமையாளர்களான இவர்கள், கரூரில் உள்ள கார்மென்ட்ஸ், துணி கடைகளுக்கு, துணி வியாபாரம் செய்து

மொடக்குறிச்சி: கொடுமுடி அருகே, வாய்க்கால் பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில், ஒரே ஊரை சேர்ந்த, விசைத்தறி உரிமையாளர்கள் நான்கு பேர் பலியாகினர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சீனாபுரம் அருகேயுள்ள வீரணம்பாளையத்தை சேர்ந்தவர்கள் மணி, 50, ரகுநாதன், 41, சகோதரர்கள் கிருஷ்ணசாமி, 44, ராஜா, 40; விசைத்தறி உரிமையாளர்களான இவர்கள், கரூரில் உள்ள கார்மென்ட்ஸ், துணி கடைகளுக்கு, துணி வியாபாரம் செய்து வந்தனர். அதற்கான பணத்தை வசூலிக்க, 15 நாளுக்கு ஒருமுறை செல்வர். பணம் வசூலிக்க, பெருந்துறையில் இருந்து, நேற்று மதியம், 2:00 மணிக்கு, மாருதி 800 காரில், நால்வரும் புறப்பட்டனர். மணி காரை ஓட்டினார். கொடுமுடி அருகே, ஒத்தக்கடை, பள்ளக்காட்டூர் பகுதியில், 3:00 மணியளவில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர வாய்க்கால் பள்ளத்தில் செங்குத்தாக கவிழ்ந்து நின்றது. இதில் நான்கு பேரும் பலியாகி விட்டனர். கொடுமுடி போலீசார் நான்கு பேரின் உடலை மீட்டு, கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஒரே பகுதியை சேர்ந்த, விசைத்தறி உரிமையாளர்கள் நான்கு பேர் விபத்தில் பலியானது, உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X