பொது செய்தி

தமிழ்நாடு

வெந்தயம் விலை உயர்வு

Added : நவ 25, 2020
Share
Advertisement
சேலம்: தமிழகத்துக்கு தேவையான வெந்தயம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து, விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. தற்போது, வெந்தயம் அறுவடை முடிந்த நிலையில், வியாபாரிகள், விவசாயிகள் இருப்பு வைத்து வருகின்றனர். இதனால், தமிழக மார்க்கெட்டுகளுக்கு, அதன் வரத்து சரிந்துள்ளது. கடந்த மாதம் வரை, வாரம், 50 லாரிகளில் வந்த வெந்தயம், தற்போது, 20

சேலம்: தமிழகத்துக்கு தேவையான வெந்தயம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து, விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. தற்போது, வெந்தயம் அறுவடை முடிந்த நிலையில், வியாபாரிகள், விவசாயிகள் இருப்பு வைத்து வருகின்றனர். இதனால், தமிழக மார்க்கெட்டுகளுக்கு, அதன் வரத்து சரிந்துள்ளது. கடந்த மாதம் வரை, வாரம், 50 லாரிகளில் வந்த வெந்தயம், தற்போது, 20 லாரிகளாக சரிந்தது. இதனால், கடந்த அக்., 28ல் கிலோவுக்கு, 10 ரூபாய், நேற்று, ஐந்து ரூபாய் என, ஒரே மாதத்தில், கிலோவுக்கு, 15 ரூபாய் உயர்ந்தது. அதன்படி, வெந்தயம் முதல் ரகம் கிலோ, 120க்கு விற்றது, 135 ரூபாய், இரண்டாம் ரகம், 115க்கு விற்றது, 130 ரூபாய், மூன்றாம் ரகம், 100க்கு விற்றது, 115 ரூபாயாக உயர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X