மேட்டூர்: 'நிவர்' புயலால், தமிழக மின்தேவை, மூன்று நாள் சரிய வாய்ப்புள்ளது. தமிழக மின்வாரியம் மூலம் அதிகபட்சம், 17 ஆயிரத்து, 682 மெகாவாட் மின்சாரம் வினியோகிக்க முடியும். வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், கடந்த, 3ல், தமிழக மின்தேவை, 15 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்தது. பெரும்பாலான தொழிற்சாலைக்கு விடுமுறையால், கடந்த, 14ல், தீபாவளியன்று, தமிழக மின்தேவை, 8,500 மெகாவாட்டாக கடுமையாக சரிந்தது. பின், தொழிற்சாலைகள் செயல்பட தொடங்கிய நிலையில், நேற்று முன்தினம், தமிழக மின்தேவை, 13 ஆயிரத்து, 349 மெகாவாட்டாக அதிகரித்தது. 'நிவர்' புயலால், 25(இன்று), 26(நாளை), 27ல், தமிழக வட கடலோர மாவட்டங்களில், கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்த மாவட்டங்களில், விபத்துகளை தடுக்க, மின்தடை ஏற்படுத்த, வாரியம் திட்டமிட்டுள்ளதால், மூன்று நாளும், தமிழக மின்தேவை சரிய வாய்ப்புள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE