சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக்கொலை: பழிக்குப்பழியாக நடந்த சம்பவத்தில் 3 பேர் கைது

Added : நவ 25, 2020
Share
Advertisement
சேலம்: ராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபர், சேலத்தில், பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக நடந்த சம்பவத்தில், மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, சின்னமாயகுளத்தை சேர்ந்த, அருள்மணி மகன் எடிசன், 23. முன்விரோதத்தால், கடந்த அக்., 7ல், வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த கோபிநாத், 29, தேவகுமார், 23, ஆகியோரை,

சேலம்: ராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபர், சேலத்தில், பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக நடந்த சம்பவத்தில், மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.


ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, சின்னமாயகுளத்தை சேர்ந்த, அருள்மணி மகன் எடிசன், 23. முன்விரோதத்தால், கடந்த அக்., 7ல், வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த கோபிநாத், 29, தேவகுமார், 23, ஆகியோரை, ஏர்வாடி தர்கா போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழக்கரை நீதிமன்றம், இருவரையும், மதுரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அவர்கள் ஜாமின் கோரிய நிலையில், சேலம், சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், காலை, மாலையில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது. கடந்த நவ., 20 முதல், இருவரும், சூரமங்கலம் தனியார் விடுதியில் தங்கி, போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தனர். இதையறிந்த எடிசன் உறவினர்கள் சிலர் சேலம் வந்து, இரு நாட்களாக, கோபிநாத், தேவகுமார் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். நேற்று மாலை, 5:30 மணிக்கு, இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட்டு விட்டு, சூரமங்கலம் பிரதான சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது, ஐந்து பேர் கொண்ட கும்பல் வழிமறிக்க, தேவகுமார் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்குள் ஓடி ஒழிந்து கொண்டார். கோபிநாத்தை சரமாரியாக வெட்டி சாய்த்ததில், அவர், சம்பவ இடத்தில் பலியானார். கும்பல் ஆட்டோவில் தப்பியது. போலீஸ் உதவி கமிஷனர்கள் நாகராஜ், பாலசுப்ரமணியன், கொலையாளிகள் தப்பிச்செல்வது குறித்து, 'மைக்'கில் போலீசாரை உஷார்படுத்தினர். அதே நேரம், பள்ளப்பட்டி போலீசார், ஓமலூர் பிரதான சாலையில், ஆட்டோவில் ரத்தக்கறையுடன் வந்திறங்கி, பஸ் ஸ்டாண்டுக்குள் நடந்து வந்த மூவரை சுற்றிவளைத்தனர். விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம், சின்னமாயகுளத்தை சேர்ந்த, பரமசிவம் மகன் கார்த்திக், 21, கோவில் பாக்கியம் மகன் விக்னேஷ், 22, ராஜேந்திரன் மகன் ரமேஷ், 27, என, தெரிந்தது. எடிசன் கொலைக்கு பழிக்குப்பழியாக, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டனர். மேலும் தப்பிய இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X