ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் இன்பரசு, ஆற்காடு நகர போலீசில் நேற்று கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: மேலகுப்பத்தை சேர்ந்த குணசுந்தரி, 35, என்பவர் ஆற்காடு பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பெண்கள் கடனுதவி பிரிவில், தற்காலிக ஊழியராக பணிபுரிகிறார். இவர் போலி ஆவணங்கள் மூலம், 48 பேருக்கு அரசு ஊழியர்கள் என கூறி, 2.29 கோடி ரூபாய் கடன் பெற்று தந்துள்ளார். எனவே தற்காலிக ஊழியர் குணசுந்தரி மற்றும் போலி ஆவணங்கள் கொடுத்த, 48 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE