பொது செய்தி

தமிழ்நாடு

சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம்: தபாலில் பெற முன்பதிவு

Added : நவ 25, 2020
Share
Advertisement
நாமக்கல்: சபரிமலை ஐயப்பன் கோவிலில், தபால் மூலம், பிரசாதம் வழங்குவதற்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கி உள்ளது. அக்கோவிலில், மண்டல மகரவிளக்கு சீசனை ஒட்டி, திருவிதாங்கூர் தேவஸ்தானமும், தபால் துறையும் இணைந்து, பிரசாதத்தை தபால் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டத்தில் உள்ள. நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு தலைமை அஞ்சலகம், 57 துணை அஞ்சலகங்களில். இதற்கான

நாமக்கல்: சபரிமலை ஐயப்பன் கோவிலில், தபால் மூலம், பிரசாதம் வழங்குவதற்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கி உள்ளது. அக்கோவிலில், மண்டல மகரவிளக்கு சீசனை ஒட்டி, திருவிதாங்கூர் தேவஸ்தானமும், தபால் துறையும் இணைந்து, பிரசாதத்தை தபால் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டத்தில் உள்ள. நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு தலைமை அஞ்சலகம், 57 துணை அஞ்சலகங்களில். இதற்கான முன்பதிவு நடக்கிறது. அரவணை பாயாசம், நெய், குங்குமம், மஞ்சள், விபூதி மற்றும் அர்ச்சனை பிரசாதம் அடங்கிய பார்சலின் விலை, 450 ரூபாய். ஒரு நபர், ஒரு விண்ணப்பத்தில், அதிகபட்சம், 10 பிரசாத பாக்கெட்டுகள் பெற முன்பதிவு செய்யலாம். இந்தப் பிரசாதம், ஸ்பீட் போஸ்ட் மூலம், முன்பதிவு செய்த பக்தர்களின் வீடுகளுக்கு அனுப்பப்படும். விபரங்களுக்கு, வணிக வளர்ச்சி அலுவலர்களான சிவக்குமாரை, 98941 12154; சங்கரை, 90428 55559 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X