பள்ளிபாளையம்: 'புயலால் இடர்பாடுகள் ஏற்பட்டால், நகராட்சி கட்டுப் பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்' என, பள்ளி பாளையம் நகராட்சி கமிஷனர் இளவரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நிவர் புயல், வரும், 27 தேதி வரை தொடர்ந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் குறித்து நகராட்சி அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 24 மணி நேரமும் செயல்பட உள்ள, கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால், 04288 - 240816 எண்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE